Why doesn’t my Husband share stuffs from his Life
(அன்றாட வாழ்க்கையில் நிறைய பேசுபவர்கள் / குறைவா பேசுபவர்கள் – சிறந்த எடுத்துக்காட்டு)
ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் பெண் இவர்களில் பெண் அதிகமாகவும், உற்சாகமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் (Scientific mind) ஆர்வமாகவும், நிறைய விவரங்கள் அறிந்து கொள்ளும் ஆர்வமுடன் பேசக்கூடியவளாக, நிறைய கேள்வி கேட்பவராக இருக்கலாம்.
ஆனால், அவளுடன் இருக்கும் ஆண் குறைவாகவும், அமைதியானவனாகவும், அறிவு பூர்வமாக (Philosophical Mind) யோசிக்கும், தேவைக்கு மட்டுமே பேசும் ஆணாக இருக்கலாம்.
அதற்காக எல்லா ஆண்களும் phylosophical mind அல்ல. உதாரணத்துக்கு பேதுரு நிறைய கேள்வி கேட்பார். அவர் scientific mind.
நிறைய வழிகளில் இவர்கள் ஒருவருக்கொருவர் gifted கதாபாத்திரங்கள். ஏன் gifted? 2 பேரும் பேசிக்கொண்டு இருந்தால் யார் கேட்பது? 2 பேரும் பேசாமல் உம்மென்று இருந்தால், வாழ்க்கை எப்படி போகும்? நடப்பிக்க வேண்டிய விஷயங்களை யார் சொல்லுவது? ஆனால் தவறான புரிதல்களால் அடிக்கடி சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் வருகின்றன. தவறான புரிதலுக்கான ஆதாரங்களில் ஒன்று வெவ்வேறு தனிப்பட்ட Filters (மனக்கண்ணாடி) பயன்படுத்துவதாகும்.
சைக்காலஜி யில் அத்தகைய பெண் பொதுவாக நிறைய பேசும் நபராக இருப்பார். அந்த ஆண் குறைவாகப் பேசும் நபராக இருப்பார். இவர்களுக்கிடையில் வாக்குவாதம் எப்படி வரும் என்றும் அதை எவ்வாறு சமாளிப்பது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
தேவியும் சங்கரும் புதுமணத் தம்பதிகள் என்று வைத்துக்கொள்வோம். தேவி நிறைய பேசும் நபராகவும், சங்கர் குறைவாக பேசும் நபராகவும் உள்ளனர். இருவரும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தங்கள் நாளைப் பகிர்ந்து கொள்வதில் சிறிது நேரம் செலவிடுகிறார்கள்.
தேவி நிறைய பேசுவாள். அன்றைய தினம் நடந்த அனைத்தையும் சொல்கிறாள். அன்றைய முக்கிய நிகழ்வுகளுடன் பல முக்கியமற்ற விவரங்கள், கிசுகிசுக்கள் போன்றவற்றையும் அவள் பகிர்ந்து கொள்கிறாள். அந்த நாளை விவரிக்கும் போது எண்ணற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறாள். தன் தோழி கருவுற்றிருப்பதில் அவள் மகிழ்ச்சி அடைகிறாள்; யாரோ ஒருவர் தனது ஸ்டேஷனரிகளை தவறாக வைப்பதால் அவள் மிகவும் எரிச்சலடைகிறாள்; அவள் பெறப்போகும் அடுத்த பெரிய Project மற்றும் பலவற்றைப் பற்றி அவள் உற்சாகமாக பேசுகிறாள். போன வருஷம் தவறா நடத்தின விதத்தைப் பத்தி கோபப்படுகிறாள்.
ஷங்கர் பொறுமையாகக் கேட்டு, சரியான நேரத்தில் தலையை அசைப்பது, ஆச்சரியப்படுவது, பாராட்டுவது என்று கலந்து கொள்கிறான். அவள் முடித்த பின், அவன் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் நேரம் வந்தபபோது, “ஓ, இன்று எப்போதும் போல வழக்கமான இன்னொரு நாள் தான். நீங்க சொல்லுங்க என்றதும், “நானா? சில Files பார்த்தேன். சில project வேலைகளை முடித்தேன். மற்றபடி, பெரிதாகச் சொல்லும்படி ஒன்றும் இல்லை” என்று உற்சாகம் இல்லாமல் சாதாரண தொனியில் சொன்னான்.
மக்கள் பொதுவாக மற்றவர்களை தங்களைப் போலவே மதிப்பிடுகிறார்கள். தேவிக்கு “நாம் இவ்வளவு விவரமாக, உற்சாகமாக சொல்கிறோம். ஆனால் இவர் 2 வரியில் முடித்துவிட்டார் என்று முதலில் குழம்புகிறாள். இவரெல்லாம், சோழா செரட்டன் buffet சாப்பிட்டு வந்தாலும், ரோட்டுக்கடை ரேஞ்சில் விஷயத்தை முடிப்பவர்.
அவர்கள் மிகவும் புரிந்து கொள்ளாத வரை, தேவி தன் கணவரின் reaction ஐப் பார்த்து, “அவருக்கு என் மீது interest போய் விட்டதா என்றும், தன்னை நேசிக்க வில்லை என்றும், அன்பற்றவராகவும், care பண்ணாதவராகவும் இருக்கிறார்” என்றும் யோசிக்கிறாள். அவள் தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் அவனுடன் பகிர்ந்து கொள்கிறாள். ஆனால் அவனது முழு நாளைப் பற்றி சொல்ல இரண்டு வாக்கியங்கள் மட்டுமே உள்ளன.
“அவர் என் மீதான ஆர்வத்தை இழக்கிறாரா? அவர் ஏன் என்னுடன் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை? என்னுடன் பேசுவது அவருக்குப் பிடிக்கவில்லையா?” இந்தக் கேள்விகளுக்கு அவள் என்ன பதில் சொன்னாலும் அது பெரிய உதவியாக இருக்காது.
தேவி புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், அவளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய விவரங்கள் அவருக்கு முக்கியம் என்றாலும், அவர் எல்லா விஷயங்களையும் பகிரக் கூடிய டைப் இல்லை.
அதனால் அவர் ஆர்வத்தை அல்லது எதையும் இழக்கிறார் என்று அர்த்தமல்ல. அவரைப் பொறுத்தவரை, பெரிய விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள நினைப்பார்.
எடுத்துக் காட்டாக, நிறுவனத்தில் சில சாதனைகளை முறியடிக்கும் ஒரு குழுவை அவர் வழிநடத்தினால், அவளிடம் சொல்ல அவர் உற்சாகமாக இருப்பார். அந்த நேரத்தில் அவர் எப்படி முழு டீமையும் ஒன்றாக இணைத்தார் என்பதில் இருந்து, திட்டத்தின் ஒவ்வொரு நாளும் கணக்கைக் கொடுக்கும் பணியை எப்படி முடித்தார் என்பது வரை share பண்ணுவார்.
மற்றவர்கள் எந்த டைப், எந்த மாதிரியான filter பயன் படுத்துவார்கள் என்பதைப் புரிந்து கொண்டால், இதுபோன்ற பல குழப்பங்களைத் தீர்க்க உதவும்.
ஷங்கர், தேவிக்கு கவனம் சிதராத அன்பை செலுத்துகிறார் மற்றும் சிறிய விஷயங்கள் அவளுக்கு மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொள்கிறார். தேவியும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டால், அவன் குறைவாகப் பகிர்ந்துகொள்வதற்கும் அவளுக்கான உணர்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அது 2 விதமான ரகத்தில் தான் Scientific mind ஆ, Phylosophical Mind ஆ எந்த ஒரு ரகம் என்பதுதான்.
இதுவே, குழந்தைகள் வளரும்போது அவர்கள் எந்த ரகம் என்று நமக்கு ஆரம்ப நாட்களில் தெரியாது. அதனால், நிறைய கேள்வி கேட்கும் குழந்தைகள் அறிவாளி என்றும், ஒன்றுமே கேட்காத குழந்தை மக்கு என்றும், எதிலும் ஆர்வமில்லாத குழந்தை என்ற முடிவுக்கு வரக்கூடாது.
அதுபோல அதிகம் கேள்விகேட்கிற குழந்தைகளை பார்த்து. “சும்மா, தொணத்தொனன்னு பேசாத. இவனைப் பாரு எவ்ளோ அமைதியா இருக்கான்னு’’ இன்னொரு பையனை compare பண்ணி காயப்படுத்தக்கூடாது.
So ஒரு வீட்டில் உள்ளவர்கள் எந்த ரகம், அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? உறவை பலப்படுத்த அவர்களுடன் எப்படி பேசவேண்டும்? பிரச்சனை வரும்போது எப்படி solve பண்ண வேண்டும் என்று,
உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, இது போன்ற குடும்ப பிரச்சனைகளுக்கு நாங்கள் Counseling கொடுக்கிறோம். சபைகளில் Training எடுக்கிறோம்.