Weight Loss – Problem of the body or the mind? - Life Changers Training Ministry
12567
post-template-default,single,single-post,postid-12567,single-format-standard,ajax_fade,page_not_loaded,smooth_scroll,,qode-theme-ver-2.6,wpb-js-composer js-comp-ver-5.4.5,vc_responsive

Weight Loss – Problem of the body or the mind?

Weight Loss – Problem of the body or the mind?

12:54 26 June in Life Changers

எடை இழப்பு – உடலின் பிரச்சனையா? மனதின் பிரச்சனையா?

 

அபத்தமான உணவுமுறைகள், கடுமையான, கொடூரமான உடற்பயிற்சிகள், ஆரோக்கிய பானங்கள் என்று என்னதான் செய்யலை?

 

இந்த பகுதியை நீங்கள் ஆர்வத்துடன் படிக்கிறீர்கள் என்றால், நீங்கள் இது எல்லாவற்றையும் முயற்சித்து அலுத்துப் போய் இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிதாக ஒன்றைத் தொடங்கும்போது, அதையே எப்போதும் தொடர முடியாது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வதற்கு முன், அது சில காலம் வேலை செய்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதை முதலில் நீங்களும் நம்பினீர்களா? அந்த ஒவ்வொரு சிறு முயற்சியின் மூலம் தேவன் தந்த பலனுக்கு நன்றியுடையவர்களாய் இருந்தீர்களா?.

 

 

கடந்த கால அனுபவத்திலிருந்து கவனிக்க வேண்டிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், “எப்படி நான் எடை இழக்க முடியும்?” என்பது கேள்வி அல்ல. அதை எப்படி செய்வது என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஏற்கனவே பலமுறை வெற்றிகரமாக செய்தும் இருப்பீர்கள். இல்லையா? “எடையைக் குறைப்பது மற்றும் பராமரிப்பது எப்படி, வலிமிகுந்த செயல் என்று உணராமல் உடல் எடையை குறைப்பது எப்படி, இயற்கையாகவே உடல் எடையை குறைக்க மோட்டிவேஷன் பெறுவது எப்படி என்று எல்லாம் உங்களுக்குத் தெரியும். ஆனால் தொடர்ச்சியாக எதையும் செய்ய முடியாமல் தோற்று போவீர்கள். அதனால் உங்கள் இப்போது செய்யும் முயற்சியை நிறுத்தி விட்டு வேறு என்ன முயற்சி செய்யலாம் என்ற எண்ணத்தில் மூழ்கி விடுவீர்கள்.

 

இஸ்ரவேல் ஜனங்களும் பலமுறை வனாந்திரம் போய் கர்த்தரை ஆராதிக்கப் போவோமென முயற்சி செய்து தோற்றுப் போய் அலுத்துப் போய், எங்களை கொல்லவா இங்கு கூட்டிட்டு வந்தீங்கனு மோசே கிட்ட புலம்புவாங்களே… அது போல.. நீங்களும் தோத்துப் போயிருப்பீங்க. புல்மபுவீங்க.

 

 

ஆகவே, எனது செயல்களை மாற்ற எனது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை எப்படி மாற்றுவது?” என்பது தான் உங்கள் தேவையாக இருக்க வேண்டும். How to change my thoughts, feelings and emotions to change my actions?”.

 

இது மனதில் தான் இருக்கிறது. Its in the Mind.

 

உடல் பருமனாக இருக்கும் ஒருவருக்கு எது தன்னை கொழுப்பாக மாற்றும், எது உடல் எடையை குறைக்க உதவும் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் உடல் எடையை குறைக்கும் உத்வேகம் அவ்வப்போது அலை அலையாக வந்து மிகக் குறுகிய காலத்திற்கு நீடிக்கும். எனவே நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் உங்கள் உடல் அதன் இயல்பானபருமன் நிலைக்குத் திரும்பும். அதுதான் உங்கள் இயல்பான நிலை என்று முடிவு கட்டி விடும்.

 

முயற்சி செய்யும் போது தேவனை துணைக்கு அழைக்கலாம். ஜெபத்தில் வைக்கலாம். அவர் கூட இருந்து சரி செய்ய வேண்டியவைகளை உங்களுக்கு நினைப்பு ஊட்டுவார். உங்களுக்கு இருக்கும் மன உளைச்சல்களின் சத்தத்தில் அவர் பேசுவது உங்களுக்கு எப்படி கேட்கும்?
அதனால்… நான் இங்கு வேற வழிகளில் விளக்குகிறேன்.

 

நரம்பியல் பாதைகள் (Neural Pathways)

 

நமது மூளையில் பல நரம்பியல் சங்கங்கள் (Neural associations) உள்ளன. அவை நமது முக்கிய கதாபாத்திரங்களை வரையறுக்கின்றன. ஒவ்வொரு முறையும் நாம் ஒரு புதிய செயலைச் செய்யும்போது ஒரு நரம்பியல் பாதை உருவாகிறது, மேலும் மேலும் அதைச் செய்யும் போது பாதை வலுவடைகிறது. It becomes stronger and stronger. பருமனானவர்களில் பெரும்பாலானோருக்கு, உணவு சில வகையான இன்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

மக்கள் அதிகமாக சாப்பிடுவதற்கான காரணங்களின் ஆச்சரியமான பட்டியலில் இது முதன்மையானது. அதனால், சிலர் எரிச்சல், காயம், மன அழுத்தம், கோபம், அல்லது வேலையில் மோசமான நாளாக இருந்தால் கூட அவர்கள் அதிகமாக சாப்பிட்டு அதன் மூலம் மகிழ்ச்சி அடைவார்கள். ஏனென்றால், இவர்கள் உணவை மகிழ்ச்சியுடன் இணைத்து இருக்கிறார்கள். உணவுக்கும் மகிழ்ச்சிக்கும் ஒரு நரம்பியல் பாதை strong ஆக உருவாக்கி வைத்திருப்பார்கள்.

 

உதாரணத்திற்கு, மனிதர்களின் கலாச்சாரத்தின் படி, உணவு என்பது கொண்டாடுவதற்கான ஒரு வழியாகும் – பிறந்தநாள், ஆண்டுவிழா, திருமணம், வேலையில் சாதனை, பிரிவு உபச்சார விழா, கோவில் திருவிழாக்கள் என்று மகிழ்ச்சியான தருணங்களில் எல்லாம் உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

 

மகிழ்ச்சியுடன் உணவு தொடர்பு பல ஆண்டுகளாக வலுப்பெற்று வருகிறது. நீங்கள் அதை மீறி, எந்த மாதிரியான உணவுக் கட்டுப்பாட்டில் ஈடு பட்டாலும், உங்களால் தொடர முடியாமல், மறுபடியும் உங்கள் பருமனான இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவீர்கள்.

 

எனவே எடை இழப்பு இந்த சுயத்தைத் தோற்கடிக்கும் வழுப்பெற்ற நரம்பியல் பாதையை மாற்றுவதில் தொடங்குகிறது. இந்த மூல காரணத்தை நிவர்த்தி செய்யாமல், டயட் மற்றும் உடற்பயிற்சிகளை முயற்சிப்பது உடல் எடையை குறைப்பதற்கான மேலோட்டமான முயற்சிகள் மட்டுமே.

 

 

நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நம்பிக்கையை உங்கள் உடல் முழுவதும் உணர வேண்டும். நீங்கள் work-out செய்யும் போது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் நரம்பியல் பாதை உருவாக்க வேண்டும். நீங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்யும்போது வெளியேறும், ஒவ்வொரு துளி வியர்வையையும் பார்க்கும் போது உங்களுக்கு மகிழ்ச்சி வரவேண்டும்.

 

மகிழ்ச்சி வரவழைக்க முடியுமா?

 

ஏனென்றால், உங்கள் இலட்சியத்தை நோக்கி நெருங்குகிறீர்கள் என்றும் ஆரோக்கியமான, அழகான தேகத்தைப் பெறப்போகிறீர்கள் என்ற மகிழ்ச்சி வரவேண்டும்.

 

 

தட்டில் veg salad பார்த்தால் நாம ஆரோக்கியமாகப் போகிறோம் என மகிழ்ச்சி வரவேண்டும். உடற்பயிற்சி செய்து உடம்பு வலிக்கும் போது ஆஹா! நாம் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என மகிழ்ச்சி வரவேண்டும். உணவுக்கட்டுப்பாடோ, உடற்பயிற்சியோ நீங்கள் சகித்துக் கொள்ள வேண்டிய குறுகிய கால வலியை வலியாக நினைத்தால், உங்கள் மோட்டிவேஷனை இழக்க நேரிடும். நீங்கள் பழைய நிலைக்கே திரும்பி விடுவீர்கள்.

 

உங்களுடைய ஒவ்வொரு step க்கும் நீங்கள் மகிழ்ச்சியை connect பண்ணனும். அப்போ உங்க GOAL நோக்கி நகருவீங்க. இது தான் ஜெபிக்கும் போதே பெற்றுக் கொண்டோம் என விசுவாசிப்பது.

 

“செய்வதை விடச் சொல்வது எளிது” என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சரி, இந்த தொடரில் எனது அடுத்த கட்டுரை நிச்சயமாக ஆச்சரியமாக இருக்கும். எடை இழப்பு – நடவடிக்கை எடுக்க



"Reach out to us and let's make things happen!"