Are you clear about clarity? - Life Changers Training Ministry
29
wp-singular,post-template-default,single,single-post,postid-29,single-format-standard,wp-theme-strata,ajax_fade,page_not_loaded,smooth_scroll,,qode-theme-ver-2.6,wpb-js-composer js-comp-ver-5.4.5,vc_responsive

Are you clear about clarity?

Are you clear about clarity?

12:59 08 August in Life Changers

தெளிவு பற்றி நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா?

 

ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் புதிய சுய உதவித் தத்துவங்கள் (Self-help philosophies), ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியாளர்கள் (Personality Development Trainers), திறன் பயிற்சியாளர்கள் (Efficiency Coaches) போன்றவை வெளிவருவதால், கிட்டத்தட்ட அனைவருக்கும் தெளிவு தேவை என்பதை அறிந்திருக்கிறார்கள். உங்கள் முன்னுரிமைகள் (Priorities), உங்கள் வாழ்க்கையில் உங்கள் இலக்குகள் (Goals), உங்கள் தொழில் லட்சியங்கள் (Career ambitions) போன்றவற்றைப் பற்றி உங்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும் என்று நீங்கள் தொடர்ந்து கேள்விப்படுகிறீர்கள்.

 

பிரச்சனை என்னவென்றால், இப்போது பல குழுக்கள் பல்வேறு வகையான தெளிவுகளைப் பற்றி பேசுகின்றன, அது மீண்டும் குழப்பத்திற்கு வழிவகுத்துள்ளது.

 

 

நான் மற்றொரு வகையான தெளிவைப் பற்றி விவரிக்க முயற்சிக்கிறேன்.

 

இது உங்கள் மனதை மூடி இருக்கும் பனியை கொஞ்சம் விலக்கும் என்று நம்புகிறேன். இது வாழ்க்கையில் உங்கள் இலக்குகளைப் பற்றி தெளிவுபடுத்தும். நான் கேட்கிறேன், நீங்கள் எப்போதாவது ஒரு இலக்கை அடைந்துவிட்டீர்கள், ஆனாலும் அது நீங்கள் நினைத்த அளவு சந்தோஷத்தைத் தர வில்லையா? நம்மில் எத்தனை பேர் இது மாதிரி சொல்றவங்களைக் கேட்டிருப்போம், “என்னிடம் எல்லாம் இருக்கிறது, தேவன் தான் எல்லாம் தருகிறார். ஆனால் நான் இன்னும் வெறுமையாக உணர்கிறேன். நான் இன்னும் திருப்தி அடையவில்லை.”.

 

இங்கு, குறிப்பிட்ட உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் இல்லாததால், சாதனை கூட மகிழ்ச்சி தரவில்லை என்று நினைக்கிறோம். Why? It is due to the absence of specific emotions and feelings.
தேவனே கொடுத்திருந்தாலும், அது எந்த வித குறிப்பிட்ட மகிழ்ச்சியை தருகிறது என்று தெரியாவிடில் சாதனை கூட மகிழ்ச்சி தராது. ஏனெனில், நீங்கள் செய்யும் அல்லது செய்ய விரும்பும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிப்பதற்காகவே. இது அனேகருக்குத் தெரியாது. இதுதான் நான் சொல்லப் போகும் முக்கியமான பாயிண்ட்.

 

உதாரணத்திற்கு, ஒருகாலத்தில் கார் வாங்குவது ஒரு பெரிய கனவாக அனேகருக்கு இருந்திருக்கும். வெயிலிலும் மழையிலும் Bike லேயே பிரயாணம் பண்ணி இருப்போம். இது போன்ற பல காரணங்களால், பெரும்பாலான மக்கள் கார், பெரிய வீடு போன்றவற்றை வாங்க விரும்புகிறார்கள்.

 

ஏனெனில் அந்த விஷயங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும் காரை வாங்கிய பிறகு, சில காரணங்களுக்காக கணவன் / மனைவி தொடர்ந்து “இது என்ன கார், சோப்பு டப்பா மாதிரி இருக்குது, சஸ்பென்ச்சன் சரி இல்லை, AC சரி இல்லை என்று காரைப் பற்றி புகார் செய்து கொண்டே இருந்தால், கார் அர்த்தமற்றதாகிவிடும்.

 

கடவுளும் இவள் கேட்டாள், கொடுத்தேன். ஆனாலும் இவளுக்கு மகிழ்ச்சியும் இல்லை, நன்றி உணர்வும் இல்லை என அவருக்கே கடுப்பாகி விடும். எனவே, இது கார் வாங்குவதைப் பற்றி இல்லை. அதை வாங்கிய பின் கிடைக்கும், அனுபவிக்கும் மகிழ்ச்சி என்ற உணர்வு தான் முக்கியம்.

 

This is why people should have CLARITY about what FEELINGS and EMOTIONS they want to experience and what it means to them.

 

அதனால், நமக்கு கார் வாங்கியதால் எந்த சந்தோஷம் மற்றும் உணர்வுகளை உணர விரும்புகிறோம் என்பதைத் தேர்வு செய்யத் தெரியவில்லை. ஆனால் எந்த மாதிரியான சந்தோஷம்(உணர்வுகள்) தேவை என்பதைப் பற்றி தெளிவு படுத்த ஒரு நிமிடம் கூட செலவு பண்ணாததுதான் காரணம்.

 

அதனால், இப்ப நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், “நாம் தொடர்ந்து அனுபவிக்க விரும்பும் முதல் 5 உணர்வுகள்/உணர்ச்சிகள் என்ன?” என்று நாம் யோசிக்க வேண்டும். நம்மில் பெரும்பாலோர் மகிழ்ச்சியாக, பெருமையாக, தன்னம்பிக்கையுடன், திருப்தியுடன் இருக்க விரும்புகிறோம்.

 

மேலும், வாழ்க்கையில் நமக்கென்று ஒரு இலட்சியம், சமுதாயத்திற்கு சேவை செய்யும் எண்ணம், தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறி, அது தேவனோடு இணைந்த ஒரு வாழ்க்கைக்கு உட்பட்டதாக இருக்கவும் வேண்டும். தேவ சித்தமாக இருக்க வேண்டும். இது போன்ற எந்த விதமான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார் வாங்கினீர்கள் என்று புரிந்தால், கார் வாங்கிய பின் குறை சொல்ல மாட்டீர்கள். இது புரிந்தால், கார் வாங்கிய மகிழ்ச்சி எப்போதும் இருக்கும்.

 

சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கனவுப் பட்டியலைப் பகுப்பாய்வு (Analyze) செய்யுங்கள். சில நேரங்களில் சில உணர்ச்சிகள் மற்றவர்களைச் சார்ந்து இருக்கும்.

 

 

கார் வாங்கும்போது, “என் மனைவியுடன் எல்லா இடத்திற்கும் செல்ல ஆசைப் பட்டேன்” என நினைத்து வாங்கி இருப்பீர்கள். ஆனால், வாங்கிய பின், உங்கள் மனைவி வாரம் முழுக்க வேலைக்கு செல்வதால், வீட்டில் ரெஸ்ட் எடுக்க விரும்புகிறார்கள். உங்க கார் ஆசை டமால். அப்படியல்ல. மேலே சொன்னது போல, 5 முக்கியமான உணர்வுகளை கண்டு பிடித்தால் இந்த பிரச்சினை சரியாகி விடும்

 

எடுத்துக்காட்டாக, உங்கள் லிஸ்டில் முதலில் “மகிழ்ச்சி” என்ற உணர்ச்சி இருக்கலாம். மனைவியுடன் காரில் செல்வது மகிழ்ச்சியா? வெயில், மழைன்னு கஷ்டப்படாமல் வசதியாக போவதில் மகிழ்ச்சியா? பஸ், ட்ரயின் ந்னு அலையாமல் போவதில் வரும் மகிழ்ச்சியா? கெளரவமா? சிக்கனமாக இருப்பதில் வரும் மகிழ்ச்சியா? ஓட்டும் மகிழ்ச்சியா? ஓட்டும் போது அளவில்லாமல் சில்லுனு ஏசியில் பயணம் செய்யும் மகிழ்ச்சியா? எதில் உண்மையான மகிழ்ச்சி என்று தெரிந்தால்…. நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணரலாம். காரே இல்லாமல் உங்க மனைவியோட நேரம் செலவு பண்ணுவதில் உள்ள மகிழ்ச்சியை கண்டுபிடித்தால் காரே இல்லாமலும் மகிழ்ச்சியை உணர முடியும்

 

தேவனுக்கும் உண்மையில் நன்றி உள்ளவங்களாக இருப்பீர்கள். உங்களை மகிழ்ச்சியாக உணர நீங்கள் வெளிப்படையாக சில நேரம் வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை. இது நிஜம். ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள்.

 

இதுபோன்ற உங்களின் உண்மையான அடிப்படை உணர்ச்சிகளின் லிஸ்ட்டைக் கண்டுபிடித்த பிறகு, உங்கள் அன்றாட வாழ்க்கையில் உங்கள் சந்தோஷத்தைக் கெடுக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் இந்தத் தெளிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால், நீங்கள் எதை எப்படிக் கையாள வேண்டும் என்றும் அதை அணுகும் கண்ணோட்டமே மாறிவிடும்.

 

ஆமென்.!!!



"Reach out to us and let's make things happen!"