What Are Filters? - Life Changers Training Ministry
14519
wp-singular,post-template-default,single,single-post,postid-14519,single-format-standard,wp-theme-strata,ajax_fade,page_not_loaded,smooth_scroll,,qode-theme-ver-2.6,wpb-js-composer js-comp-ver-5.4.5,vc_responsive

What Are Filters?

What Are Filters?

09:05 09 August in Subject Content

Filter (வடிகட்டிகள்) என்றால் என்ன?

 

உலகத்தில் நாம் சந்திக்கும் அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றை மூளைக்குள் உள் வாங்கி சேமித்து வைப்பது ஒரே மாதிரி இருக்காது. ஆளுக்கு ஆள் வித்தியாசப் படலாம். தகவல்களை நாம் ஐம்புலன் (5 senses) வழியாக உள் வாங்கி, நமது Filter (மனக் கண்ணாடி) களைப் பயன்படுத்தி தகவல்களுக்கு ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்கிறோம். ஒவ்வொருவரின் Filter ம் வெவ்வேறு மாதிரியா இருக்கும் என்பதுதான் முக்கியமான விஷயம். இதில் தான் மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் சங்கடம் ஏற்படுகிறது.

 

இதன் அர்த்தம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் வேறு வேறு மனக் கண்ணாடி அணிந்து உலகத்தை அனுபவிக்கிறோம் என்று தானே அர்த்தமாகிறது? அந்தக் கண்ணாடியைத்தான் Filter என்று அழைக்கிறோம்.

 

எடுத்துக்காட்டாக, இதைப் படிக்கும் போது, ​​உங்கள் மூச்சின் வேகம், இந்த web page ல் popupஆகும் மற்ற விளம்பரங்களைக் கவனித்தீர்களா? இதே வீட்டில் எத்தனை நாள் வசிக்கிறீர்கள்? எத்தனை ஜன்னல்கள் இருக்கின்றன என்று கேட்டால் உங்களால் உடனே சொல்ல முடியுமா?
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களும் உங்கள் பார்வையிலேயே இருந்தாலும், இந்தக் கேள்விகளில் ஒன்றிற்காவது உங்களால் பதிலளிக்க முடியவில்லையா? அன்றாட வாழ்வில் பல விஷயங்களை ஆழ்மனது கையாண்டு கொள்கிறது. நமது கவனத்திற்கு வருவதில்லை. இதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது.

 

அதே போல, நாம் தகவல் பரிமாறும் போதும் அப்படித்தான் நடக்கிறது.
நம் காதுகள் ஒவ்வொரு நாளும் நிறைய வார்த்தைகளைக் கேட்டாலும், நமது மூளை முக்கியமானதாக உணரப்படுவது மிகக் குறைவு தான். ஒரு வகையில், பல தனிப்பட்ட Filters (வடிகட்டி) மூலம் உலகைப் பார்க்கிறோம். வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு வடிகட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். இது நிறைய குழப்பங்களையும் தவறான புரிதலையும் உருவாக்குகிறது.

 

அதனால் இந்த அமெரிக்க முறை மனோவியல் கலை ஒவ்வொருவரும் தனித்தனி குணாதிசியம் உள்ளவர்கள், தனித்தனியாக புரிந்து கொள்ளலாம், அவர்களுக்கு கொடுக்கும் அன்பு ஒரு விதம், ஒவ்வொருவருடனும் பிரச்சினை solve பண்ணும் விதம் வேற. இதையெல்லாம் புரிந்து கொள்ள உதவுவது இந்த வடிகட்டிகள் (Filters)..

 

எங்களிடம் 50 வடிகட்டிகள் உள்ளது. சொல்லிக்கொடுக்க எங்களுக்கு நேரமும் இல்லை. கற்றுக் கொள்ள சபை மக்களுக்கும் நேரமில்லை.

 

We have 50 filters.



"Reach out to us and let's make things happen!"